இந்திய பவுலர்கள் அபாரம்… முதல் டி 20 போட்டியில் எளிமையான வெற்றி!

இந்திய பவுலர்கள் அபாரம்… முதல் டி 20 போட்டியில் எளிமையான வெற்றி!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டி 20 போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது.

ஆஸ்திரேலியா தொடரை நிறைவு செய்துள்ள இந்தியா தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி 20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முதல் டி 20 போட்டி திருவனந்தபுரத்தில் நடந்தது.

இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் இரண்டு 3 ஓவர்களில் 10 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்களை இழந்தது. இதில் ஒரே ஓவரில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

அதன் பிறகு மெல்ல நிதானமாக விக்கெட்களை இழக்காமல் ஆடிய தென் ஆப்பிரிக்கா, ஆட்ட முடிவில் 108 ரன்கள் சேர்த்து 8 விக்கெட்களை இழந்திருந்தது. எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கும் ஆரம்பம் சரியாக அமையவில்லை. ரோஹித் ஷர்மா 0 ரன்களுக்கும், கோலி 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன் பின்னர் இணைந்த கே எல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பெறவைத்தனர். இருவரும் அரைசதம் அடித்து கலக்கினர். 3 விக்கெட்கள் வீழ்த்தி சிறப்பாக பந்து வீசிய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்தியா 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.