High Court Madurai Branch:கிறிஸ்தவ அமைப்புகளை கட்டுப்படுத்த சட்டம் தேவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவிப்பு.
இந்தியாவில் இந்து சமய கோவில்கள் மற்றும் நிலங்கள் ஆகியவை இந்து சமய அறநிலையத்துறை கீழ் பாதுகாத்து வரப்படுகிறது. மேலும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அவை செயல் படுத்தப்பட்டு வருகிறது. அதே போல் தான் இஸ்லாமிய சமூக கோவில்கள் வக்ஃபு வாரியத்தின் கீழ் வருகிறது. மேலும் இதற்காக தனி சட்டங்கள் இயக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கோவில் நிலங்களை யாரும் தவறான முறையில் வாங்கவோ விற்கவோ முடியாது.
கோவில் நிலங்கள் முறையாக பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். இதனால் ஆக்கரமிப்புகளை மிக எளிதில் கண்டறிந்து மீட்க முடியும். அந்த வகையில் தான் வக்ஃபு வாரிய சட்டமும் செயல்படுகிறது. இதில் கிறிஸ்தவ கோவில்கள் மற்றும் அவைகளின் சொத்திற்கு என்று தனி அமைப்புகளோ அல்லது சட்டமோ இந்தியாவில் இயற்றப்படவில்லை. இது தொடர்பாக கோரிக்கைகள் மக்களால் வைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில்தான் உயர்நீதி மன்ற மதுரை கிளை ஒரு வேண்டுகோளை முன் வித்துள்ளது அதாவது கிறிஸ்தவ அமைப்புகளை கட்டுப்படுத்த சட்டம் தேவை என அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் நாட்டில் உள்ள கிறிஸ்தவ அமைப்புகள் மற்றும் கோவில்கள், அதன் சொத்துக்கள் இந்த சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும். மேலும் கிறிஸ்தவ அமைப்புகளின் சொத்துக்களை நீதிமன்ற அனுமதி இல்லாமல் பதிவு செய்ய முடியாது தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் தவறான வழியில் சொத்துக்களை அபகரிக்க முடியாது. அவ்வாறு நடந்தால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருக்கிறது.