உச்சநீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்ட அதிரடி உத்தரவு! இங்கு தமிழில் பெயர் பலகை இல்லையென்றால் அபராதம்!
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி 5:3:2 என்ற விகிதத்தில் தூய தமிழ் ஆங்கில பிற மொழிகளில் எழுதப்பட்ட தமிழ் பெயர் பலகை தான் கடைகளுக்கு முன்பு வைத்திருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கடந்த 1982 மற்றும் 1990 ஆகிய ஆண்டுகளில் அரசாணை வெளியிட்டது.
இந்த அரசாணை அமல்படுத்தக்கூடிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மனு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் ஜெயசந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் அரசாணைப்படி பெயர்பலகை வைத்திருக்காதவர்களுக்கு 5௦ அபராதமாக வசூல் செய்யப்படுகிறது.
அபராத தொகையை உயர்த்தி வசூலிக்கும் திட்டம் அரசின் ஒப்புதலுக்காக உள்ளது என விளக்கம் அளித்தது. மேலும் கடந்த 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரை 674 கடைகளில் 4.58 லட்சம் அபராதமும் 349 ஹோட்டல்களில் இருந்து ரூம் 32 ஆயிரத்து 800 ரூபாயும் அபராதமும் வசூல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தது. இந்தச் சட்டத்தை முறையாக பின்பற்ற அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுவதாகவும் விளக்கமளித்தது.
அதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் அரசு விதிமுறைகளின் படி கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பெயர் பலகை வைக்காமல் இருப்பவர்களுக்கு தற்போது வரை 50 ரூபாய் தான் அபராதம் விதிக்கப்படுகிறது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. அரசாணை வந்தபோது 50 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால் தற்போது உள்ள சூழலை கருத்தில் கொண்டு தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் அரசாணையின்படி தமிழில் பெயர் பலகை வைக்கவில்லை என்றால் அதிக அபராதம் வசூல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.மேலும் முதல் முறையாக ஒரு தொகை அபராதமும், இரண்டாவது முறையாக தொடர்ந்து தமிழ் பெயர் பலகை வைக்காதவன் மீது அபராத தொகை அதிகப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து விதிமுறைகள் மீறுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது .மேலும் அரசாணையின் படி தமிழ் மொழியிலேயே பெயர் பலகை வைப்பதை குறித்து உத்தரவை நடைமுறைப்படுத்துவது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரங்கள் ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.