மதுரை-கோவை மெட்ரோ ரயில்!! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Photo of author

By Jeevitha

சென்னையை தொடர்ந்து சில முக்கிய நகரங்களுக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்து வசதியை தொடங்க நம் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதனை தொடர்ந்து மதுரை மற்றும் கோவை இடையே மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக அறிக்கையில் கூடுதல் ஆவணங்கள் இணைக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளது என மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இது மட்டும் அல்லாமல் கோவையில் 39 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ரயில் திட்டம் மற்றும் 32 ரயில் நிலையங்கள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.

இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை அமைக்க எந்த ஒரு நிதி சார்ந்த பிரச்சனைகளும் நிலவாது என தமிழக அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. ஏற்கனவே மதுரை கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மெட்ரோ அமைக்க மத்திய அரசுக்கு விரிவான திட்டம் மற்றும் அதன் நோக்கங்கள் கடந்த ஜூலை மாதம் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால் மீண்டும் மத்திய அரசு இந்த ரயில் திட்டத்திற்கான விரிவான அமைப்புகள் மற்றும் திட்ட அறிக்கைகள் வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதனை தொடர்ந்து மெட்ரோ ரயில் நிறுவனம் தற்போது கூடுதல் ஆவணங்கள் இணைக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் மத்திய அரசும் தமிழக அரசும் தொடர்ந்து மெட்ரோ ரயில் அமைக்க ஆர்வம் காட்டி வருவதால் நிதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாது என தெரிவித்துள்ளனர். மேலும் ஏற்கனவே அனுப்பப்பட்ட  ஆவணங்களில் மதுரையில் 11,360 கோடி மதிப்பிலும் மற்றும் கோவையில் 10,740 கோடி மதிப்பிலும் ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது என கூறப்படுகிறது.