மதுரையில் உள்ள மதுரை அமெரிக்க கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை இயர்பியல் படித்து வரும் மாணவர் தனுஷ் குமார் ஓர் உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். நடுத்தர மக்களுக்கு பெரும் பயனாய் அமையவிருக்கும் இந்த சாதனைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
இவர் ஓர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் சிறுவயது முதலே இயற்பியல் மீது ஆர்வம் கொண்டுள்ளார் .தற்பொழுது ஏறிக்கொண்டே வரும் பெட்ரோலின் விலையால் மக்களால் தவித்து வருகின்றனர். இதனால் கடந்த 2 வாரமாக இவர் ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டு உலகின் முதல் மின்சாரம் மற்றும் சோலார் மூலம் இயங்கக்கூடிய இரு சக்கர வாகனத்தை கண்டுபிடித்துள்ளார்.
இதை நடுத்தர மக்களும் எளிதாக வாங்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்று இதனை வெறும் 25 ஆயிரம் செலவில் செய்து முடித்துள்ளார்.இதைக்குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியது என்னவென்றால்,
இவர் கண்டுபிடித்த இருசக்கர வாகனம் மின்சாரத்தின் மூலம் ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என்றும் அதனை ஓட்டும் பொழுது சோலார் பேனலின் உதவியால் தானாக மின்சார சக்தி உருவாகி மேலும் 20 கிலோமீட்டர் பயணிக்கலாம் எனக் கூறியுள்ளார் தேவைப்படும்போது கடலின் செய்தும் இதில் பயணிக்கலாம்.
இது அதிகபட்சமாக 160 கிலோ எடையையும் தாங்கும் வலிமை பெற்று உள்ளது இதை ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 4 முதல் 6 ரூபாய் வரை மட்டுமே ஆகும் என கூறியுள்ளார்.மேலும் முறையான வழிமுறைகளை பின்பற்றி இதனை பெருமளவில் தயாரிக்கும் பொழுது இதனை வெறும் 18 ஆயிரம் செலவில் தயாரிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.
உலகின் மிக விலை குறைவான மின்சார மிதிவண்டியை கண்டுபிடித்ததற்காக ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இவரை கௌரவித்து இவர் சாதனையை அவர்களது புத்தகத்தில் அறிவித்துள்ளது.