மதுரை மாவட்டம் நலச்சங்கத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
காலியிடங்கள்
குளிர் பதன கம்மியர்
தொகுப்புடியும் மாதம் 20 ஆயிரம் வயது 35 வயதுக்கு கீழே இருக்க வேண்டும் ஐடிஐ ரெஃப்ரிஜிரேஷன் மெக்கானிக் அண்ட் ஏர் கண்டிஷன் பாட நெறியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
EDSS-LIMS IT Co ordinator-1
தொகுப்பூதியம் மாதம் 16.500 35 வயதிற்கு கீழ் இருக்க வேண்டும் எம் சி ஏ, பி டெக், பி.இ, பாடநெறியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பிகாம் படிப்புடன் பிகாம் படிப்புடன் tally முடித்திருக்க வேண்டும்.
மருந்தாளுனர்- 1
தொகுப்பூதியம் – மாதம் 15,000 35 வயதிற்கு கீழ் இருக்க வேண்டும் மருத்துவ படிப்பில் பட்டம் அல்லது பட்டயம் (B.Pharm/D.Pharm) முடித்திருக்க வேண்டும்.
உளவியலாளர் psychologist/Counsellor) தொகுப்பூதியம் 23 ஆயிரம் 35 வயதிற்கு கீழ் இருக்க வேண்டும் உளவியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று குறைந்தபட்சம் இரண்டு வருட காலம் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
நிபந்தனைகள்:
இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது. பணியின் காலம் ஒரு வருடம் எந்த ஒரு வருடம் எந்த காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பணியில் இணைவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப படிவங்களை madurai.nic.in/notice-category/recruitment என்ற வலைதளம் முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்துடன் இப்படவைகளுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட நகல்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி துணை இயக்குனர், சுகாதாரப்பணிகள் அலுவலகம் விஸ்வநாதபுரம் மதுரை மாவட்டம்- 625014