தமிழகத்தில் தீபாவளியன்று இதை செய்யக்கூடாது! அரசு வெளியிட்ட புதிய கட்டுப்பாடு!

0
98

தமிழகத்தில் தீபாவளியன்று இதை செய்யக்கூடாது! அரசு வெளியிட்ட புதிய கட்டுப்பாடு!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாடவிற்கும் நிலையில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அந்த கட்டுப்பாட்டு அறிவிப்பில் கூறியதவாறு:

தமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 – 7 மணி வரையும் மாலை 7- 8 மணி வரை ஆகிய இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.

மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனங்களை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

சீன வெடிகளை வெடிக்கவோ விற்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.எனவே இது போன்ற பட்டாசுகளை வெடிக்க கூடாது.

பள்ளிகளின் அருகில் மருத்துவமனை அருகில் பெட்ரோல் பங்க் அருகில் போன்ற பொது இடங்களில் பட்டாசுகள் வெடிக்க கூடாது.

பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் பட்டாசு வெடிக்க கூடாது.

வண்டிகளின் அருகிலோ அல்லது கூரைகளின் அருகிலோ ராக்கெட் ரகம் போன்ற பட்டாசுகளை வெடிக்க கூடாது.

பட்டாசுகளை எளிதில் தீப்பற்றக்கூடிய இடத்தில் வைக்க கூடாது.

பட்டாசுகளை வெடிக்க தீக்குச்சிகள் அல்லது விளக்குகளை பயன்படுத்துவதை விட பெரிய அளவிலான பத்தி குச்சியை பயன்படுத்துவது ஆபத்தை குறைக்கும்.

உள்ளிட்ட 19 கட்டுப்பாட்டு புதிய அறிவிப்பினை அரசு வெளியிட்டுள்ளது.

author avatar
Pavithra