ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் பண மோசடி!!  மதுரை போலீசாரிடம் சிக்கிய  கும்பல்!!

CRIME:ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் 96 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் ஏமாற்றிய கும்பல் மதுரை மாவட்ட காவல்துறையினர் கைது  செய்தனர்.

மதுரை  காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த  ஜூன் 21 ஆம் தேதி தொலைபேசி வாயிலாக புகார் ஒன்றை அளித்தார்  பாதிக்கப்பட்ட ஒருவர்.
அவர் அளித்த புகாரில்  ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று அந்த மோசடி கும்பல் என்னிடம் இருந்து  96 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி இருக்கிறது.

அந்த மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க  புகார் அளித்து இருக்கிறார் அந்த நபர். இவரின் புகார் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தது. அடுத்தபடியாக மாவட்ட எஸ்.பி. அரவிந்த் உத்தரவுபடி, சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையை  தீவிரப்படுத்தியது.

பணப் பரிமாற்றம் செய்த வங்கி கணக்கு தொடர்பான விசாரணை செய்து திருச்சி ஆழ்வார் தெருவைச் சேர்ந்த சீனி முகமது என்ற நபர் 20 லட்ச ரூபாயை அவரது இரண்டு வங்கி கணக்கில் டெபாசிட் செய்து இருப்பதை கண்டுபிடித்து இருக்கிறது. மேலும் சீனி முகமது விடம் போலீசார்  தீவிர  விசாரணை நடத்தியது.

விசாரணை முடிவில் திருச்சி தனரத்தின நகரை சேர்ந்த முகமது சபீர், முகமது ரியாஸ்,திருச்சி உறையூரைச் சேர்ந்த முகமது அசாருதீன் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை சக்கரப்பள்ளி சேர்ந்த மகன் முகமது மர்ஜுக் ஆகிய 6 பேர் கொண்ட குழு இந்த குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த மோசடி கும்பல் மேற்கு வங்காளம், கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களில் பல வங்கி கணக்குகளை பயன்படுத்தி பொதுமக்களிடம் ஒரு கோடி ரூபாய் வரை ஏமாற்றிய இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாக சைபர் குற்ற புகார்கள் தெரிவிக்கலாம்.