மதுரையில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: மக்கள் சாலை மறியல்!

Photo of author

By Parthipan K

மதுரையில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: மக்கள் சாலை மறியல்!

மதுரை அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஒரு மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை அருகே துவரிமான் கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என வலியூறுத்தி வெங்கிடஜலபதி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினரும், கிராம பெண்களும் இன்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், மதுரை- மேலக்கால் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும், துவரிமான் கிராமத்தில் மதுபானக் கடையை திறக்காதே என சாலையில் பதாததைகளை ஏந்தி கோஷமிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகமலைபுதுக் கோட்டை காவல்துறையினர் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, மக்களை கலைந்து போக செய்தனர்.