கேவலமான அரசியல் செய்யும் ஸ்டாலின்! பாண்டியராஜன் தாக்கு!

Photo of author

By Sakthi

சென்னை ஆவடியில் அதிமுக சார்பாக நடந்த ஒரு நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் தங்கள் சார்ந்த கட்சியிலிருந்து விலகி அமைச்சர் பாண்டியராஜன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்திருக்கிறார்கள்.

கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு, அமைச்சர், மற்றும் எம்எல்ஏ ஆகியோர் சால்வை அணிவித்து கட்சியின் உறுப்பினர் அட்டைகளையும் வழங்கி அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், எந்தவித ஆதாரமும் இன்றி முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு அவர்களின் புகழுக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக ஸ்டாலின் பேசியிருப்பது அவர் செய்யும் மிகப்பெரிய தவறான அரசியல் என்று தெரிவித்திருக்கின்றார்.

3 லட்சம் பட்டாசு தொழிலாளர்களின், வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாக முதல்வர் தனிப்பட்ட முறையில் அனைத்து மாநில அரசுகளுடன் பேசி வருகின்றார் என அவர் தெரிவித்தார்.

அதோடு முதல்வர் மாவட்டம்தோறும் பயணம் செய்வதால் தான், நீர்நிலைகளில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதாகவும், 64 கோடி செலவில் 3 மடங்கு விரிவடைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.