கர்நாடக அரசு எடுத்த முடிவு! தமிழகத்தின் முதல்வர் கடும் கண்டனம்!

Photo of author

By Sakthi

மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதம் 12ம் தேதி தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். அந்த சமயத்தில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி போன்றவற்றை அதிகப்படுத்துவது இந்த அரசின் நோக்கம். வழக்கம்போல வருடம் தோறும் ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பதற்கு நடவடிக்கைக மேற்கொள்ளப்படும் என என தெரிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

இதற்கிடையில் கர்நாடக அரசு காவிரியாற்றின் நடுவே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த அணை கட்டப்படும் ஆனால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாவார்கள். இதன்காரணமாக, இந்த அணையை கட்டுவதற்கு தமிழக அரசு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், ஜூன் மாதம் 18 தேதி அதாவது நேற்றைய தினம் இதுதொடர்பாக பேட்டியளித்த கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கேள்வி ஒன்றுக்கு பதில் தெரிவிக்கும்போது மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மேகதாது அணையின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார்.

கர்நாடக அரசின் இந்த முடிவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையான கண்டனங்களை தெரிவித்து இருக்கின்றார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கின்ற சூழலில் கர்நாடக முதலமைச்சர் ஒருதலைபட்சமாக இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருப்பது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்திருக்கின்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.இந்தத் திட்டம் தமிழக விவசாயிகளின் நலனுக்கு எதிரானது. தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் காவிரி நீரின் அளவை குறைக்கும் முயற்சி தான் இது என்று தெரிவித்து தமிழக அரசு மிகக் கடுமையாக இந்தத் திட்டத்தை எதிர்த்து வருகிறது.

தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமரிடம் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் அந்த தீர்மானத்தை கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் தேதி நேரடியாக வழங்கியும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது தமிழக அரசு. தற்போது பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேரில் சந்தித்த சமயத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று நானும் அறிவுறுத்தி இருக்கின்றேன் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த சூழ்நிலையில், கர்நாடகத்தின் முதலமைச்சர் எடியூரப்பா சுயமாக இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருப்பது இரண்டு மாநில நள்ளிரவு நல்லூரவிற்கும் எந்தவிதத்திலும் உகந்தது இல்லை எனவும் தமிழ் நாட்டையும், தமிழ்நாட்டின் விவசாயிகளையும், வஞ்சிக்க முயற்சி செய்யும் செயலாகவே இது பார்க்கப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்களின் நலனுக்கும் உச்சநீதிமன்றத்தின் காவிரி இறுதித் தீர்ப்புக்கு எதிரான மேகதாது அணை கட்டும் தீர்மானத்தை கர்நாடக மாநில அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும், மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது எனவும் எதிர்ப்பினை தெரிவித்து இருக்கின்றார் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின்