மந்திரிக்கும் கொரோனா பாதிப்பு! பரபரப்பில் கட்சி தலைமையகம்!

0
195
Magical corona virus! Party headquarters in excitement!
Magical corona virus! Party headquarters in excitement!

மந்திரிக்கும் கொரோனா பாதிப்பு! பரபரப்பில் கட்சி தலைமையகம்!

அமெரிக்காவில் கொரோனா அதிகமாக பரவி உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த ஜனவரி மாதம் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

மேலும் ஜோ பைடனை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வந்தது. இதற்கிடையே, அதிபர் ஜோ பைடன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டார் என அதிபரின் டாக்டர் கெவின் ஓகானர் தெரிவித்தார்.

இதைதொடர்ந்து மீண்டும் அமெரிக்காவின் ராணுவ மந்திரியான லாயிட் ஆஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து  அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.தற்போது அவருக்கு 69 வயதாகிறது. லாயிட் ஆஸ்டின் தனக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், ஒரு வாரமாக வீட்டில் இருந்து பணியாற்ற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆஸ்டின் இராண்டாம் முறையாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். ஆஸ்டின் பூஸ்டர் உள்பட கொரோனா தடுப்பூசியின் 3 டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleபைக் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! பிளஸ் ஒன் மாணவன்  பலி!
Next articleதனியார் லீக் போட்டிகளால் சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு ஆபத்து… எச்சரிக்கை மணி அடிக்கும் கபில்தேவ்