இன்று மகா சங்கடஹர சதுர்த்தி ! எண்ணியதை எண்ணியவாறே நிறைவேற்றும் விநாயகப்பெருமானை வணங்குங்கள்!

Photo of author

By Kowsalya

இன்று மகா சங்கடஹர சதுர்த்தி ! எண்ணியதை எண்ணியவாறே நிறைவேற்றும் விநாயகப்பெருமானை வணங்குங்கள்!

சங்கடஹர சதுர்த்தி மந்திரம்:

ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா

பொது பொருள்:

உனது பக்தர்கள் வேண்டும் வரத்தை வரமளிக்கும் விநாயகப் பெருமானே உன்னை வணங்குகிறேன். முழு முதற் கடவுளும் நீ, பூத கணங்களுக்கெல்லாம் தலைவனும் நீ. பக்தர்களை துன்பத்தில் இருந்து காத்தருள்வாய் பெருமானே. பக்தர்கர்களோடு எப்போதும் துணை நிற்பவரே. பக்தர்கள் தொடங்கும் எந்த ஒரு செயல்களுக்கும் முழுமுதற் காரணமும் நீதான். உனது பக்தர்களின் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை நீக்கி நேர்மறை எண்ணங்களையும் மேலோங்கச் செய்பவர் நீ தான்.

சங்கடஹர சதுர்த்தி நாளில் இந்த மந்திரத்தை கூறுவதனால் காரியம் சித்தி அடையும், திருமண தடை நீங்கும், கடன் தொல்லை தீரும். இப்படி எண்ணிலடங்கா பல நன்மைகள் இந்த மந்திரத்தில் அடங்கியுள்ளன. எனவே சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானை வணங்கி மந்திரத்தை சொல்லி நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.