மகாகவி பாரதியாரின் 138 வது பிறந்தநாள் – தமிழக அரசு மரியாதை
மகாகவி பாரதியாரின் 138 வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தமிழக அரசின் சார்பில் மகாகவி பாரதியார் அவர்களின் 138 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு மாண்புமிகு மீன்வளம் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் திரு டி. ஜெயக்குமார், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு, மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு.க .பாண்டியராஜன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திருமதி .பா .வளர்மதி, சட்டமன்ற உறுப்பினர் திரு.நடராஜ், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு. மகேசன் காசிராஜன், இ.ஆ.ப.,செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் முனைவர் சங்கர் இ.ஆ.ப. ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வின் போது கழக தொண்டர்கள் திரளானோர் பங்கேற்றனர்.