வருடத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை வருகிறது.ஆனால் மகாளய அமாவாசை சற்று சிறப்பு வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது.இந்த மகாளய அமாவாசை ஆடி,தை மற்றும் புரட்டாசி மாதங்களில் மட்டுமே வருகிறது.
12 மாதங்களில் வரக் கூடிய ஒவ்வொரு அமாவாசை அன்றும் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க இயலாதவர்கள் இந்த தை,ஆடி மற்றும் புரட்டாசியில் வரக் கூடிய அமாவாசை நாளில் திதி கொடுக்கலாம்.
மகாளய அமாவாசையில் திதி கொடுத்தால் முன்னோர்களின் ஆசீர்வாதம் மற்றும் புண்ணியம் வந்து சேரும் என்பது ஐதீகம்.இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பதால் அவரது கர்மவினைகள் நீங்கி ஆத்மா சாந்தி அடையும்.இன்று அதாவது அக்டோபர் 02 புரட்டாசி மாத மகாளய அமாவாசை.சாஸ்திரப்படி இன்றைய நாளில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.விரதம் இருந்து திதி தர்ப்பணம் கொடுத்து தானம் வழங்கினால் சாபம் மற்றும் வாழ்வில் ஏற்பட்ட அனைத்து கஷ்டங்களும் நீங்கும்.இந்நாளில் தானம் வழங்கினால் பித்ருக்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும்.
மகாளய அமாவாசை திதி கொடுக்க உரிய நேரம்:
காலை 7:30 மணியிலிருந்து 09:00 மணி வரை திதி கொடுக்க உகந்த நேரம்.மதியம் 12:00 மணியில் இருந்து 01:30 மணி வரை திதி கொடுக்க உகந்த நேரம்.திருமணத் தடை,குழந்தையின்மை நீங்கி விரைவில் நல்லது நடக்க மகாளய அமாவாசையில் விரதம் இருந்து வழிபடலாம்.இந்த மகாளய அமாவாசை கடந்த செப்டம்பர் 30 முதல் வருகின்ற அக்டோபர் 17 வரை இருக்கிறது.
மகாளய அமாவாசை விரதம்
இந்நாளில் அன்னதானம் செய்தால் வாழ்வில் நன்மைகள் அதிகம் நடக்கும் என்பது ஐதீகம்.அதிகாலையில் தலைக்கு குளித்துவிட்டு முன்னோர்கள் படத்திற்கு முன் மண் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.பிறகு பூண்டு,வெங்காயம்,முருங்கை சேர்க்காத உணவுகளை சமைத்து தானம் வழங்கினால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது.