நாளை கொண்டாடப்படும் மகாத்மா காந்தி பிறந்தநாள்!!! ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த புஸ்சி ஆனந்த்!!!

0
95
#image_title

நாளை கொண்டாடப்படும் மகாத்மா காந்தி பிறந்தநாள்!!! ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த புஸ்சி ஆனந்த்!!!

இந்தியா முழுவதும் நாளை(அக்டோபர்2) காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு ரசிகர்கள் அனைவரும் இதை செய்ய வேண்டும் என்று பூஸ்சி ஆனந்த் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.

நடிகர் விஜய் அவர்கள் அவருடைய விஜய் மக்கள் இயக்கத்தை வைத்து ரசிகர்களின் மூலமாக பல சமூக நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றார். நடிகர் விஜய் அவர்கள் விஜய் மக்கள் இயக்கம் மூலமாக ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் தளபதி பயிலகம் என்ற பெயரில் இரவு நேர பாடசாலை நடத்துவது, அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல நலத்திட்ட உதவிகளை செய்வது, கல்வி பயிலும் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் வகையில் ஊக்கத் தொகை வழங்குவது போன்ற பல பணிகள் செய்து வருகின்றார்.

அது மட்டுமின்றி தலைவர்களின் பிறந்தநாளின் பொழுது தலைவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை(அக்டோபர்2) மகாத்மா அவர்களின் பிறந்தநாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய புதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் அவர்கள் நடிகர் விஜய் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக புஸ்சி ஆனந்த் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நாளை(அக்டோபர்2) மகாத்மா காந்தி அவர்களின் 155வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து நமது மக்கள் இயக்கத்தினர் அனைவரும் தமிழக மாநிலம் முழுவதும் உள்ள காந்தி அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.

அது மட்டுமில்லாமல் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் வீடுகளுக்கு சென்று பொன்னாடை அணிவித்து அவர்களை கௌரவப்படுத்த வேண்டும். மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்கள், பகுதி தலைவர்கள், நகரம், ஒன்றிய தலைவர்கள், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் நிர்வாகிகளுடன் மக்கள் இயக்க கொடிகளை வைத்து இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

மகாத்மா காந்தி அவர்களின் சிலைக்கு மாலை அணிவிப்பதை புகைப்படம் எடுத்தும் தியாகிகளை கௌரப்படுத்துவதை புகைப்படம் எடுத்தும் இரண்டு புகைப்படங்களையும் 90039 33964 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்ப வேண்டும். நாளை(அக்டோபர்2) மக்கள் இயக்கத்தினர் அனைவரும் காந்தி ஜெயந்தியை திட்டமிட்டபடி சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.