நடிகர் மகேஷ் பாபுவின் வீட்டில் நடந்த சோகம்… திரையுலகினர் அஞ்சலி!

0
183

நடிகர் மகேஷ் பாபுவின் வீட்டில் நடந்த சோகம்… திரையுலகினர் அஞ்சலி!

பிரபல தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தியுள்ளார்.

நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திராதேவி இன்று காலமானார். அவருக்கு வயது 70. அவர் உடல்நலக்குறைவுக்காக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, இன்று அதிகாலை 4 மணிக்கு இறந்தார். இந்திரா தேவி மூத்த நடிகர் கிருஷ்ணாவின் மனைவி.

மகேஷ் பாபுவின் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்திரா தேவியின் இறுதிச் சடங்குகள் மகா பிரஸ்தானத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அவரது உடல் பத்மாலயா ஸ்டுடியோவில் ரசிகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். இதையடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தங்கள் அஞ்சலிகளை சமூகவலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.  இந்த மறைவு தெலுங்கு மற்றும் தென்னிந்திய சினிமாவினர் மத்தியில் சோகத்தை எழுப்பியுள்ளது.

Previous articleபண்டிகையை முன்னிட்டு போலீசாரின் புதிய பிளேன்! சரியாக செய்யாதவர்களின் மீது நடவடிக்கை!
Next articleகார்த்தி ராஜுமுருகன் இணையும் படத்தில் விஜய் சேதுபதிக்குப் பதில் இவரா?