அண்ணன் பிரதமர், தம்பி அதிபர்: இலங்கையில் பெரும் மாற்றம்!

0
177

அண்ணன் பிரதமர், தம்பி அதிபர்: இலங்கையில் பெரும் மாற்றம்!

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபயா ராஜபக்சே அபார வெற்றி பெற்று புதிய அதிபராக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பதவி ஏற்றார் என்பது தெரிந்ததே.

இதனையடுத்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே இன்று மாலை அவர் தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே அவர்களுக்கு அனுப்பி உள்ளார்

இந்த நிலையில் புதிய பிரதமராக இலங்கை முன்னாள் அதிபரும், அதிபர் கோத்தபாய ராஜபக்ஷவின் சகோதரருமான மகிந்த ராஜபக்சே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து இலங்கையில் அண்ணன் பிரதமராகவும் தம்பி அதிபராகவும் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே இலங்கையில் மகிந்த ராஜபக்சே அதிபராக இருக்கும் போது, கோத்தபாய பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தார். இவர்கள் இருவரும் இணைந்துதான் இலங்கையில் உள்ள தமிழர்களை கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது மீண்டும் அண்ணன் தம்பி இருவரும் முக்கிய பதவியை ஏற்று உள்ளதால் அங்குள்ள தமிழர்களுக்கு அச்சம் ஏற்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

Previous articleதிருமாவளவன் கைதா? சர்ச்சை கருத்துக்கு இந்துக்கள் மத்தியில் வலுக்கும் எதிர்ப்பு!
Next articleஒரே நாளில் தனுஷின் இரண்டு படங்களின் டைட்டில் வெளியிட திட்டமா?