மைதா இனிப்பு சமோசா! அஹா என்ன ருசி!  

0
416

மைதா இனிப்பு சமோசா! அஹா என்ன ருசி!

தேவையான பொருட்கள் :மைதா மாவு கால் கிலோ,தேங்காய் துருவல் கால் கப்,வெல்லம் கால் கிலோ,எண்ணெய் தேவையான அளவு.ஏலக்காய் இரண்டு.

செய்முறை : முதலில் மைதா மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பூரிக்கு பிசைவது போல் கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு வாணலியில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தைப் போட வேண்டும்.அவை கொதித்ததும் அதனுடன் தேங்காய் துருவலை போட்டு நன்றாகக் கிளறி கொள்ள வேண்டும்.

பின்பு தண்ணீர் வற்றியதும் வாணலியை இறக்கி வைத்து ஏலாக்காயை பொடி போட்டு கலக்கிய தேங்காய்யை இறக்கி வைக்க வேண்டும்.அதன் பிறகு தேங்காய் ஆறியதும் அதை சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும்  பிசைந்து வைத்துள்ள மைதா மாவை பூரிக் கட்டையில் தேய்த்து முக்கோண வடிவில் வெட்டிக் கொள்ள வேண்டும். அதனுடன் நாம் செய்து வைத்துள்ள தேங்காய்யை நடுவில் வைத்து நன்றாக மூடி சமோசா வடிவம் போல் செய்ய வேண்டும்.

பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் தயார் செய்து வைத்துள்ள இனிப்பு சமோசாவை போட்டு வேகவிட வேண்டும். ஒருபுறம் வெந்த உடன் கரண்டியால் திருப்பி போட்டு பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்க வேண்டும். மைதா இனிப்பு சமோசா ரெடி ஆகிவிடும்.

Previous articleநீங்கள் வாங்கும் ஆப்பிள் இயற்கையானதா:? Sticker -யை வைத்து கண்டறியும் எளிய வழிமுறை!!
Next articleKanavu Palangal in Tamil : கட்டிடங்கள் உங்கள் கனவில் வருகின்றதா? இதோ அதற்கான பலன்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here