ADMK BJP: சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் காலகட்டத்தில், அனைத்து கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கும், கூட்டணி அமைப்பதற்கும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. குறிப்பாக அ.தி.மு.க விலிருந்த சில முக்கிய தலைவர்கள் பா.ஜ.க-வில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்தது, டி.டி.வி தினகரன் டிசம்பர்-யில் கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிட போவது, சசிகலாவின் ஈ.பிஸ்-க்கு எதிரான வாதம், போன்றவை இவர்கள் மூவரும் பா.ஜ.க-கூட்டணியில் சேரப்போவதை தெளிவாக காட்டுகிறது என்று சொல்லப்படுகிறது.
மேலும் பா.ஜ.க வின் மூத்த தலைவர்களும், அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என்று கூறி வருவதால், சசிகலா,டி.டி.வி தினகரன். ஓ.பன்னிர்செல்வம், செங்கோட்டையன் பா.ஜ.க வில் சேர்க்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். இவர்கள் பா.ஜ.க வில் இணைந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு குறைய வாய்ப்புள்ளது. நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணியில் இருந்தாலும், 2029 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தான் குறிக்கோள் என்று சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை தனித்து இருப்பதால் அவரை ஒதுக்கிவிட்டு அ.தி.மு.க மூத்த தலைவர்களுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சியில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. தமிழக அரசியலில் தி.மு.க விற்கு போட்டியாக வலுவான எதிர்கட்சியாக இல்லாதது, அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை பதவியிலிருந்து நீக்கியது, கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க ஒத்துழைக்காமல் இருப்பது போன்றவை கட்சியின் நிலையற்ற தன்மையை காட்டுகிறது.