பிக்பாஸ் வீட்டில் தொகுப்பாளராக களமிறங்கும் மக்கள் செல்வன்! ஒரு போதும் விஜய் டிவி அதற்கு அனுமதிக்காதே! 

Photo of author

By Rupa

பிக்பாஸ் வீட்டில் தொகுப்பாளராக களமிறங்கும் மக்கள் செல்வன்! ஒரு போதும் விஜய் டிவி அதற்கு அனுமதிக்காதே!

 

அடுத்து தொடங்கவுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில் இருந்து நடிகர் கமல்ஹாசன் அவர்கள் விலகியுள்ள நிலையில் அடுத்து தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் களமிறங்கலாம் என்று கூறப்படுகின்றது.

 

அமெரிக்க நாட்டில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிந்தி மொழியில் நடத்தப்பட்டு அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம் என்று பல மொழிகளில் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் தமிழ் மொழியில் நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கொஞ்சம் அதிகமாகவே ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 

காரணம் இதில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார் என்பது தான். மேலும் இதில் மற்ற மொழியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை விட இதில் சற்று சண்டைகள் அதிகமாக இருக்கும். இதனால் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் ஆறு சீசன்கள் மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

 

கடைசியாக நடைபெற்ற 7வது சீசன் மக்கள் மத்தியில் சிறிது ஏமாற்றத்தை அளித்தது. மேலும் 7வது சீசனில் இருந்து நடிகர் கமல்ஹாசன் அவர்கள் விலக வேண்டும் என்றும் குரல்கள் எழுந்தது. இதையடுத்து பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 8வது சீசன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தற்பொழுது 8வது சீசனை தொகுத்து வழங்க மாட்டேன் என்று சமீபத்தில் கூறினார்.

 

பிக்பாஸ் நிகழ்ச்சி நூறு நாட்கள் நடக்கின்றது என்றால் நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு வெறும் 15 நாட்கள் தான் வேலை. அந்த 15 நாட்களுக்கு நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு 100 கோடி வரை சம்பளம் கொடுப்பார்கள். இருப்பினும் தனக்கு இருக்கும் படப்பிடிப்புகளால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அறிவித்தார். இதையடுத்து 8வது சீசனை தொகுத்து வழங்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் அந்த லிஸ்ட்டில் நடிகர்கள் சிலம்பரசன், விஜய் சேதுபதி ஆகியோரின் பெயர் அடிபட்டது.

 

இந்நிலையில் கிட்டதட்ட நடிகர் விஜய் சேதுபதி 8வது சீசனை தொகுத்து வழங்குவது உறுதியாகி இருக்கின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை போட்டியாளர்களுக்கு அறிவுரை வழங்குவது, தவறு செய்தால் தண்டனை வழங்குவது, கண்டிப்பது, கோபப்படுவது போன்று இருக்க வேண்டும். அதற்கு எல்லாம் பொருத்தமாக இருந்த கமல்ஹாசன் அவர்கள் விலக தற்பொழுது நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் 8வது சீசனை தொகுத்து வழங்குவார் என்று தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் திரைப்படத்தில் மட்டும்தான் கோபப்படும் ஆளாக இருக்கிறார்.

 

உண்மையான வாழ்க்கையில் மிகவும் சாந்தமான மனிதராக விஜய் சேதுபதி இருக்கிறார். கோபம் கொள்ளாமல் இருப்பார். தத்துவங்களை மழையாக பொழிந்து தள்ளுவார். இது அவர் அளிக்கும் பேட்டிகளில் இருந்தே நமக்கு தெரியும்.

 

பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் அனைத்து போட்டியாளர்களின் குறிக்கோளும் முதல் பரிசை பெற வேண்டும் என்பது தான். ஆனால் நடிகர் விஜய் சேதுபதி போட்டியாளர்களுக்கும் மத்தியில் தத்துவங்களை அள்ளி வீசி பணம் முக்கியமில்லை என்ற எண்ணை கொண்டு வந்து விடுவார். மேலும் நிகழ்ச்சியில் நடைபெறும் சாலைகளும் குறைந்துவிடும்.

 

இதனால் நடிகர் விஜய் சேதுபதி இவ்வாறான செயல்களை செய்ய விஜய் டிவி அனுமதிக்காது. போட்டியாளர்கள் எப்படியும் இரண்டு அணிகளாக பிரிவார்கள். அப்பொழுது இரண்டு அணிகளுக்கு மத்தியிலும் சண்டையை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் நிகழ்ச்சி பரபரப்பாக இருக்கும். இதை விஜய் சேதுபதி அவர்கள் எவ்வாறு செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.