அண்ணா பல்கலை தேர்வு உறுதி! விரும்பினால் எழுதலாம்!

அண்ணா பல்கலை தேர்வு உறுதி! விரும்பினால் எழுதலாம்!

சென்னையில் முதலமைச்சருடன் கலந்தாலோசித்த அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கடந்த வருடம் பிப்ரவரி 2020 ல் நடைப்பெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது எனவும்,அதை கருத்தில் கொண்டு மீண்டும் மறு தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளது எனவும் கூறினார்.

கடந்த வருடம் நடைப்பெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் இதில் பங்கேற்கலாம் என தெரிவித்தார்.தேர்விற்கான கட்டணத்தை மாணவர்கள் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

மாணவர்கள் இரண்டில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனரோ அதையே கணக்கில் எடுத்து கொள்வோம், மூன்று மணி நேர ஆன்லைன் தேர்வாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

கடந்த வருடம் நடைபெற்ற தேர்வில் சுமார் 4.25 இலட்சம் பேர் தேர்வுகளை எழுதி உள்ளனர் அதில் சுமார் 1.10 இலட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.இதை கவனத்தில் கொண்டே அண்ணா பல்கலையில் மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.விருப்பமிருப்போர் மறுதேர்வு எழுதி பயன் பெறலாம் என்று கூறினார்.

Leave a Comment