ஊரடங்கு விதிமீறல்! ஓபிஎஸ் இபிஎஸ் மீது பாய்ந்த வழக்கு!

0
194

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்று தேர்ந்தெடுப்பதற்காக நேற்றைய தினம் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் காலை ஒன்பது முப்பது மணி அளவில் ஆரம்பமானது.

ஆனால் இந்தக் இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்று தேர்ந்தெடுப்பதில் தொடர்ச்சியாக சிக்கல் நீடித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பிடிவாதமாக இருப்பதன் காரணமாக, எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்ய இயலாமல் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் குழப்பத்தில் இருந்து வந்தார்கள். இதற்கு நடுவே அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் முன்னாள் சபாநாயகர் தனபால் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு முன்மொழிந்தார் பன்னீர்செல்வம் இருந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி மிக உறுதியாக இருப்பதன் காரணமாக,தொடர்ச்சியாக சிக்கல் நீடித்து வந்தது.

அதன்பின்னர் சட்டசபை உறுப்பினர்கள் ஆதரவை வைத்து எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக சட்டசபை கட்சித் தலைவராக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டத்தில் 60 சட்டசபை உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில், மாநிலத்தில் விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிமுக தலைமை கழகத்தில் சட்டசபை உறுப்பினர்கள் கூடியதால் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதோடு அதிமுகவை சேர்ந்த சுமார் 250 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous article16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர்! இன்று கூடுகிறது!
Next articleஅண்ணா பல்கலை தேர்வு உறுதி! விரும்பினால் எழுதலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here