இன்று அனைவரது வீட்டிலும் பிரிட்ஜ் ஒரு முக்கிய மின் சாதனமாக உள்ளது.உணவுப் பொருட்களை பதப்படுத்தி வைக்க,காய்கறிகளை பிரஸாக வைக்க பிரிட்ஜ் பயன்படுத்தப்படுகிறது.
இன்று குறைந்த விலையில் பல மாடல்களில் பிரிட்ஜ் கிடைக்கிறது.பிரிட்ஜ் பயன்பாடு அதிகரித்து விட்டதால் பெரும்பாலான வீடுகளில் புதிய உணவு சமைப்பதையே மறந்து விட்டனர்.ஒருமுறை சமைத்த உணவுகளை பிரிட்ஜில் வைத்து மீண்டும் சூடுபடுத்தி உண்ணும் பழக்கம் மக்களிடத்தில் அதிகரித்துவிட்டது.
எது எப்படியாக இருந்தாலும் காலத்திற்கு ஏற்ப இந்த மின் சாதனத்தின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.பிரிட்ஜ் வாங்குவதை விட அதனை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம்.
இன்று பிரிட்ஜ் வெடித்து அதிக விபத்துகள் ஏற்படுகிறது.சமீப காலமாக பிரிட்ஜ் வெடிப்பதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகிறது.இதனால் பிரிட்ஜ் பயன்படுத்தவே அச்சமாக இருக்கிறது என்று மக்கள் புலம்பி வருகின்றனர்.
உங்கள் வீட்டு பிரிட்ஜை முறையாக பராமரித்து வந்தால் இது போன்ற விபத்துகள் ஏற்படுவது தடுக்கப்படும்.உங்கள் பிரிட்ஜில் குளிர் பதம் திடீரென்று குறைந்தால் அலட்சியம் கொள்ளாமல் பிரிட்ஜ் சுவிச் ஆப் செய்துவிட வேண்டும்.பிறகு நல்ல மெக்கானிக்கிடம் பழுது பார்த்த பின்னரே பிரிட்ஜை பயன்படுத்த வேண்டும்.
பிரிட்ஜை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற எண்ணினால் முதலில் பிரிட்ஜ் சுவிட்சை 20 நிமிடங்களுக்கு முன்னர் அணைத்து விட வேண்டும்.20 நிமிடங்கள் கழித்து பிரிட்ஜை இடம் மாற்றிக் கொள்ளலாம்.
பிரிட்ஜில் இருக்கின்ற ப்ரீஸருக்குள் அதிகளவு ஐஸ்கட்டி இருந்தால் பிரிட்ஜ் ஆட்டோமேட்டிக்காக ஆப் ஆகாமல் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கும்.இதனால் கரண்ட் பில் அதிகமாவதோடு கம்ப்ரஸர் பழுதடைந்துவிடும்.
ப்ரீசரில் இருக்கின்ற ஐஸ்கட்டிகளை கூர்மையான பொருட்களை பயன்படுத்தி உடைக்க முயற்சித்தால் அது பிரிட்ஜை பழுதடைய செய்துவிடும்.எனவே பிரிட்ஜ் பட்டனை சிறிது நேரம் அணைத்து வைப்பதன் மூலம் ஐஸ்கட்டிகளை எளிதில் கரைக்க இயலும்.
வாரத்திற்கு ஒருமுறை பிரிட்ஜை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.பிரிட்ஜில் அழுகிய பழங்கள் மற்றும் காய்கறிகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
வாசனை நிறைந்த லிக்விட் பயன்படுத்தி பிரிட்ஜை சுத்தம் செய்யக் கூடாது.காட்டன் துணியில் எலுமிச்சை சாறு பிழிந்து அதை க்ளீன் செய்ய பயன்படுத்தலாம்.