உங்கள் முகம் அதிக பிரகாசமாக.. இந்த ஒரு பொடி போதும்!! பயன்படுத்துவது எப்படி?

Photo of author

By Divya

முகத்தில் உள்ள பருக்கள்,கரும்புள்ளிகள் மறைந்து சருமம் தங்கம் போல் ஜொலிக்க வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு பேஸ் பேக் தயாரித்து பயன்படுத்துங்கள்.கெமிக்கல் க்ரீமிகளை விட ஹோம் ரெமிடிஸ் நல்ல ரிசல்ட் கொடுக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)அரிசி மாவு
2)கெட்டி தயிர்

பயன்படுத்தும் முறை:-

இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி அளவு அரிசி மாவை ஒரு கிண்ணத்தில் கொட்டவும்.பிறகு அதில் தேவையான அளவு கெட்டி தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.இதை முகத்திற்கு அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரை முகத்தை கழுவவும்.இந்த அரிசி தயிர் பேக் முகத்தை பளபளப்பாக மாற்றும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் பால்
2)கடலை மாவு

மிக்ஸி ஜாரில் 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.அரைத்த தேங்காய் விழுதில் இருந்து பால் எடுத்துக் கொள்ளவும்.

இந்த தேங்காய் பாலில் தேவையான அளவு கடலை மாவு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலக்கி முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.இவ்வாறு செய்து வந்தால் முகம் பால் போல் வெள்ளையாகும்.

தேவையான பொருட்கள்:-

1)வைட்டமின் ஈ மாத்திரை
2)அரிசி மாவு

கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்து கொள்ளவும்.பிறகு அதில் ஒரு வைட்டமின் ஈ மாத்திரை சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த பேக்கை முகத்திற்கு அப்ளை செய்து சிறிது நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் சருமம் மிருதுவாக இருக்கும்.