சரும அழகை பராமரிக்க இரசாயனப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.இயற்கை பொருட்களை கொண்டு சரும அழகை மேம்படுத்துங்கள்.இயற்கை பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சரும சுருக்கங்கள் ஏற்படுவது கட்டுப்படும்.
தேவையான பொருட்கள்:-
1)கற்றாழை மடல் – ஒன்று
2)எலுமிச்சம் பழம் – ஒன்று
3)காஸ்டிக் சோப் – 100 மில்லி
4)தேங்காய் எண்ணெய் – 100 மில்லி
5)வேப்பிலை – இரண்டு கொத்து
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு அதில் இருக்கின்ற ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு இரண்டு கொத்து வேப்பிலையை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து கற்றாழை ஜெல்லை மிக்சர் ஜாரில் போட்டு நுரை வரும் அளவிற்கு அரைத்துக் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு எலுமிச்சம் பழத்தை இரு துண்டுகளாக நறுக்கி பாதி துண்டில் இருந்து சாறை பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.விதைகளை மட்டும் நீக்கிவிட வேண்டும்.
இப்பொழுது அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு இந்த பாத்திரத்திற்குள் சிறிய பாத்திரம் ஒன்றை வைத்து டபுள் பாய்லிங் முறைப்படி கற்றாழை சோப் தயாரிக்க வேண்டும்.
அதற்கு முதலில் காஸ்டிக் சோப்பை பாத்திரத்தில் போட்டு உருகி வரும் வரை கொதிக்கவிட வேண்டும்.அதன் பின்னர் ஜெல் மற்றும் வேப்பிலை சாறை அதில் ஊற்றி நன்றாக கலந்துவிட வேண்டும்.
இவை நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை ஆஃப் செய்து விட்டு பாத்திரத்தை வெளியில் எடுக்க வேண்டும்.பிறகு சாறை அதில் ஊற்றி நன்கு கலந்துவிட வேண்டும்.அதன் பின்னர் 100 மில்லி அளவு சுத்தமான தேங்காய் எண்ணெயை அதில் ஊற்றி நன்றாக கலந்து கெட்டியாகும் வரை காய வைக்க வேண்டும்.
ஒரு நாள் கழித்து இந்த கற்றாழை சோப்பை பயன்படுத்தலாம்.வறண்ட சருமம்,முகப்பரு,கரும்புள்ளி உள்ளிட்ட சரும பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த சோப்பை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.கடையில் ஹெர்பல் என்ற பெயரில் போலி சோப் விற்கப்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது.ஆகவே இயற்கை பொருட்களை கொண்டு வீட்டிலேயே கற்றாழை சோப் செய்து பயன்படுத்துங்கள்.