சொந்த வீடு கனவு நனவாக செங்கல் பரிகாரம் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!
இன்று பெரும்பாலானோரின் கனவு சொந்த வீடு கட்டுவது தான்.வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு குடிபெயர வேண்டும் என்று பலர் கடுமையாக உழைத்து வருகின்றனர்.ஆனால் மனை விலை,கட்டுமான பொருட்களின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்வதால் சொந்த வீடு கனவு வெறும் கனவாகவே போய்விடும் போல என்று பலர் வருத்தத்தில் உள்ளனர்.
ஆனால் இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் சொந்த வீடு கனவு விரைவில் நனவாகவும்.உங்களின் கடின முயற்சியோடு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.அதற்கு முதலில் ஒரு செங்கல் வாங்கிக் கொள்ளவும்.
பிறகு அந்த செங்கலை பன்னீரில் போட்டு 10 நிமிடங்கள் கழித்து எடுத்து மஞ்சள் குங்குமத்தில் போட்டு வைக்கவும்.
இந்த செங்கலை வீட்டு பூஜை அறையில் வைத்து மாலை அணிவித்து ஊதுபத்தி ஏற்றவும்.பிறகு ஒரு மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றவும்.
அதன் பின்னர் கற்பூர கட்டியை செங்கல் மீது வைத்து பற்ற வைத்து சொந்த வீடு கனவு விரைவில் நனவாக வேண்டும் அதற்கு நான் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும்.இவ்வாறு செய்தால் சொந்த வீடு வாங்க அல்லது சொந்த வீடு கட்டுவதற்கான யோகம் உண்டாகும்.