இப்படியும் ஓட்டு கேட்கலாமா:! அதிமுகவினர் பஸ்ஸில் எழுதிய வாசகம்! ரூம் போட்டு யோசிப்பாங்களோ!

0
211

இப்படியும் ஓட்டு கேட்கலாமா:! அதிமுகவினர் பஸ்ஸில் எழுதிய வாசகம்! ரூம் போட்டு யோசிப்பாங்களோ!

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில்,தமிழகத்தில் இரு பிரதான கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.இந்திய தேர்தல் ஆணையமும் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கி விட்டன.வருகின்ற டிசம்பர் மாதம்,வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்படும் என்றும்,அந்த மாதத்திற்குள்ளேயே பெயர் சேர்ப்பு,பெயர் நீக்கம்,உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்றும், ஜனவரி 15-ஆம் தேதிக்குள் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டது.

இதனால் தமிழகத்தின் அனைத்து பிரதான கட்சிகளும் புதிய புதிய அறிவிப்புகளை அறிவித்தும்,பல்வேறு வகைகளில் மக்களுக்கு நலன் தரும் முழக்கங்களை எழுப்பியும்,மக்களிடம் மறைமுகமாக ஓட்டு கேட்கும் பணி தொடங்கிவிட்டது.
இந்நிலையில் அதிமுக அரசு,வித்தியாசமாக ஓட்டு கேட்க தொடங்கியுள்ளது.அது என்னவென்றால்,அனைத்து அரசு பேருந்துகளிலும் திருக்குறள் வாசகம் இடம் பெற்றிருப்பது நாம் பார்த்திருப்போம்.நமது சென்னை மாநகர புதிய பேருந்துகளில் திருக்குறளுடன் சேர்த்து “மக்களால் நான் மக்களுக்காகவே நான்” -புரட்சித்தலைவி அம்மா என்னும் வாசகமும் எழுதப்பட்டுள்ளது.மறைமுகமாக ஓட்டு கேட்கும் புதிய டெக்னிக் போலும்.எப்படி எல்லாம் புதுசு புதுசா யோசிக்கிறாங்கப்பா.

Previous articleஇரவு சமையல் அறையில் இதை எழுதினால் ஐஸ்வரியம் பெருகும்,!
Next articleஅதிகரித்த முன்பதிவு:! கிடைத்தது அனுமதி!! இன்றிலிருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here