கிளாமரில் தன் செல்லமான சேட்டைகளை தொடங்கிய மாளவிகா மோகனன்!

Photo of author

By Sakthi

பேட்ட திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன் இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பின்னர்தான் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிட்டியது. எந்த திரைப்படத்திலும் அவருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் மாளவிகா மோகனன் இடம்பிடித்து இருக்கின்றார் .மாஸ்டர் திரைப்படத்திற்குப் பின்னர் இதற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும் ஆனால் அந்த திரைப்படத்தின் கதாநாயகன் யார் என்பதையும் தனக்கு என்ன கதாபாத்திரம் என்பதையும் மிகத் தெளிவாக தெரிந்து கொண்டுதான் படத்தில் நடிப்பேன் என்று பல தரப்பினரிடமும் தெரிவித்து வருகிறாராம் மாளவிகா மோகனன்.

 


அதற்கு காரணமாக தெரிவிக்கப்படுகிறது. மாஸ்டர் திரைப்படத்தில் மாளவிகா மோகனுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இருக்கின்ற கதாபாத்திரமாக இல்லை என்பது தான் என தெரிவிக்கப்படுகிறது. தனுஷ் நடிப்பில் தற்போது அவருக்கு ஜோடியாக டி 43 என்ற திரைப்படத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்தில் மாளவிகா அதற்கு பெரிய வரவேற்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஆனாலும் அவர் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ச்சியாக தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதும், மீன் சமையல் காணொளி வெளியிடுவதும் என்று தொடர்ச்சியாக தன்னுடைய செல்லமான சேட்டைகளை தொடர்ந்து வருகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவருக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டம் தற்சமயம் உருவாகி இருப்பதால் இவர் எதை செய்தாலும் அதனை ரசிகர்கள் பெரிய அளவில் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதுதான் தற்சமயம் படிக்கட்டில் அமர்ந்து கவர்ச்சி புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டு இருக்கின்றார். இவர் அந்த புகைப்படம் தான் தற்சமயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.