லோ அங்கிள் கேமராவுக்கு அசராமல் போஸ் கொடுத்த  மலையாள நடிகை!வைரலாகும் புகைப்படம்!

Photo of author

By Parthipan K

மலையாளத்தில் பிரேமம் எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் அப்படத்தில்  அதிக அளவு வரவேற்பைப் பெற்றார். தனது இயல்பான நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்திருந்தார். ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருந்தார்.

இவர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி என்னும் படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதில் தனது சுறுசுறுப்பான பேச்சாலும் நடிப்பாலும் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தார் என்றே கூறலாம்.

அதற்குப் பிறகு தமிழில் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை.சமீபத்தில் இவர் தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இவர் மலையாளம், தெலுங்கு ,கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தனது ரசிகர்களை உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தார்.அந்த வகையில் தற்போது தனது ரசிகர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உங்களுக்குள்ள இவ்வளவு அழகு ஒளிச்சி இருக்குன்னு நாங்கள் கண்டு பிடிக்கவே இல்லை பாருங்களேன்….