குடியுரிமை விவகாரம்: மலேசிய பிரதமருக்கு இந்தியா பதிலடி

Photo of author

By CineDesk

இந்தியாவில் சமீபத்தில் குடியுரிமை சீர்திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவின் இந்த சட்டம் குறித்து பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்த போதிலும் ஒரு சில நாடுகள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்து மலேசிய பிரதமர் மகாதீர் முகமது கூறியபோது ’இது போன்ற ஒரு சட்டத்தை எங்கள் நாடு நிறைவேற்றினால் நிலைமை என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். மலேசியாவுக்கு வந்த இந்தியர்களையும் சீனர்களையும் நாங்கள் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு போதிய தகுதி இல்லாத போதும் குடியுரிமை கொடுத்து ஆதரித்து வருகிறோம் என்று கூறியிருந்தார்.

மலேசிய பிரதமரின் இந்த கருத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியபோது ’குடியுரிமை சட்டத் திருத்தம் என்பது முற்றிலும் எங்கள் நாட்டின் உள்நாட்டு விவகாரம் என்றும் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என்றும் இந்த சட்டம் குறித்த உண்மையை விளங்கிக்கொள்ளாமல் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் கருத்துக் கூறுவதில் இருந்து மலேசியா விலகி இருப்பது நலம் என்றும் இந்தியா கண்டிப்புடன் கூறியுள்ளது.