குப்பை தொட்டி அருகே கருகிய நிலையில் ஆண் சடலம்! ஈரோட்டில் பரபரப்பு!

Photo of author

By Kowsalya

குப்பை தொட்டி அருகே கருகிய நிலையில் ஆண் சடலம்! ஈரோட்டில் பரபரப்பு!

ஈரோடு மாவட்டத்தில் கணபதிபுரம் என்ற பகுதியில் குப்பை தொட்டிக்கு அருகே ஆண் சடலம் ஒன்று எரிந்து கருகிய நிலையில் கிடப்பதை கண்ட மக்கள் அதிர்ச்சியுற்று இருக்கின்றனர்.

ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையம் கணபதிபுரம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. அந்தப் பகுதியில் ஏதோ கருகும் துர்நாற்றம் வீசி இருக்கிறது.

அதன் பின்னர் சாலையில் சென்றவர்கள் போய் அந்த பகுதியில் பார்க்கும் பொழுது குப்பைத் தொட்டி அருகே ஆண் சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடந்து இருக்கின்றது. அதனை கண்ட மக்கள் மிகவும் அதிர்ச்சியுற்று இருக்கின்றனர்.

அதனைக் கண்ட மக்கள் உடனே கருங்கல்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் அந்த கருகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அந்த ஆண் சடலமானது அதே பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒரு நபர் என்று தெரியவந்துள்ளது.