எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட முறைகேடு வழக்கு!! மீண்டும் தொடங்கிய விசாரணை!!

0
116
Malpractice case filed against Edappadi Palaniswami!! Investigation restarted!!
Malpractice case filed against Edappadi Palaniswami!! Investigation restarted!!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட முறைகேடு வழக்கு!! மீண்டும் தொடங்கிய விசாரணை!!

தமிழகத்தின் முன்னால் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி மீது நெடுஞ்சாலை துறையில் முறைகேடு செய்ததாக வழக்கு தொடங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கு நீதிமனத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும் பொழுது நெடுஞ்சாலை அமைப்பதற்காக டெண்டர் ஒன்று விடப்பட்டிருந்து. அதன் மதிப்பு மட்டும் சுமார் ரூ.4,800 கோடி ஆகும்.

இதில் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளால் எடப்பாடி பழனிசாமி மீது புகார் தொடுக்கப்பட்டது. இதனால் திமுக அமைப்பு செயலாளர் ஆர்,எஸ்.பாரதி ஒரு சிறந்த புலனாய்வு கூட்டத்தை அமைத்து எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்றார்.

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. மேலும் 2018 ம் ஆண்டு நெடுஞ்சாலை டெண்டர் குறித்து விசாரணையை உச்சநீதிமன்றம் மேற்கொண்டது.

இது குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது அதன் பிறகு வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியது. இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்  விசாரித்தார்.

விசாரணையின் போது  எடப்பாடி பழனிசாமி மீது எந்த குற்றமும் இல்லை என்று 2018 ம் ஆண்டு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிக்கை எதுவும் ஏற்று கொள்ளப்பட வில்லை ஆகையால் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2018 ம் ஆண்டு உள்ள ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை படித்து இந்த வழக்கை முடிக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை எழுப்பப்பட்டு வந்த நிலையில் நீதிபதி இதனை ஜூலை 13 ம் தேதிக்கு மாற்றிய அமைத்துள்ளார்.

Previous articleஇந்திய அணியில் திலக் வர்மாவிற்கு பதிலாக இவர் இருக்க வேண்டும்!! முன்னாள் வீரர் பேட்டி!!
Next articleஆட்டை பிரியாணி ஆக்கிவிடுவோம்!! அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதியின் பதிலடி!!