மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எட்டு பேர் மீது வழக்கு பதிவு!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து புகார் எழுந்து வருகின்றது பட்டியல் முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது நேரில் இது தொடர்பாக எட்டு பேர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்கத்தில் மாணவர் சேர்க்கை விடை தாள்கள் மாயம், மதிப்பெண் பட்டியல் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முறை கேடு புகார்கள் எழுந்துள்ளது. மேலும் இது தொடர்பாக மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில் கூடுதல் தேர்வு ஆணையர் ராஜராஜன் உட்பட பல்கலைக்கழக அலுவலர்கள் கேரளா மைய ஒருங்கிணைப்பாளர்கள் அனுப்பிய கட்டண விவரத்தை ஆய்வு செய்யாமலேயே மாணவர் சேர்க்கை வழங்கியதும், மதிப்பெண் பட்டியல் வழங்கியதிலும் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி முன்னாள் கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன் மாணவர் சேர்க்கை பிரிவு முன்னாள் கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி தேர்வு பிரிவு கணினி அலுவலர் கார்த்தி, செல்வன் உள்ளிட்ட எட்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் இதில் முதல் குற்றவாளியாக ராஜராஜன் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில் மற்ற ஏழு பேரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.