பிரதமருக்கு மாம்பழங்களை அனுப்பிய மம்தா! கசப்பும் இனிப்பாகுமா?
வங்க தேசத்து சிங்கம் என்று சொல்லப்படும் மம்தா பானர்ஜி அவர்களுக்கும், பாரதீய ஜனதா கட்சி தலைவர்களுக்கும் இடையே உள்ள அரசியல் மோதல்கள் பற்றி உலக மக்கள் அனைவரும் அறிந்ததே.
மேற்கு வங்க சட்ட சபை தேர்தலில் இந்த மோதல்கள் எரிமலையாக வெடித்த நிலையில், இரு தரப்புகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர். கடைசியில் மம்தா தேர்தலில் வெற்றி அடைந்து மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். இருந்த போதும் அவர்களுக்கு இடையில் இருந்த மோதல் மறைந்தபாடு இல்லை.
இந்த நிலையில் தற்போது மேற்கு வங்கத்தில் மாம்பழ சீசன் தொடங்கி உள்ளதால் பா.ஜா.வின் பல்வேறு தரப்பட்ட தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி மாம்பழங்களை வாங்கி அனுப்பி உள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் விளையும் மிகச் சிறந்த மாம்பழ வகைகளை எடுத்து கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்தார். அதை தொடர்ந்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் வாழ்த்துகளுடன் மாம்பழங்களையும் அனுப்பி வைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவரான சோனியா காந்தி, மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கும் கூட இந்த சிறப்பு மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.