மனைவி இறந்ததால் மகளை கொன்றுவிட்டு தானும் இறந்த கணவன்

Photo of author

By Parthipan K

மனைவி இறந்ததால் மகளை கொன்றுவிட்டு தானும் இறந்த கணவன்

Parthipan K

மனைவி இறந்த நிலையில் 9 வயது குழந்தையை கொன்றுவிட்டு தானும் தாற்கொலோலை செய்து இருக்கிறார், தனியார் நிறுவன ஊழியர் ஒருவர்.

சென்னை ஓரக்கடத்தை சேர்ந்த தனியார் ஊழியர் ரவிச்சந்திரன்(53) இவரது மகள் தீக்சிதா(9). ரவிச்சந்திரனின் மனைவி 3 வருடங்களுக்கு முன்பு உடல் நல குறைவினால் இறந்துவிட்டார்.

அதன் பிறகு ரவிச்சந்திரன் அவருடைய மகளுடன் தனியே வசித்து வந்து இருக்கிறார். தாய் இல்லாமால் தனது மகள் கஷ்டப்படுகிறாள் என மனம் நொந்து போயிருப்பார் போலும்.

இந்நிலையில் ரவிச்சந்திரன் தன மகளுடன் மகாபலிபுரத்தில் பஸ் சட்டத் அருகே விடுதி எடுத்து தங்கி இருக்கிறார். 4 நாட்கள் அங்கே தங்கி இருந்து இருக்கிறார். நேற்று அறையை காலி செய்ய வேண்டிய நாள், ஆனால் வெகு நேரமாகியும் ரவிச்சந்திரன் வெளியே வராததால் விடுதி ஊழியர்கள் அறைக்கதவை திறந்து பார்த்து இருக்கின்றனர். அப்போது ரவிச்சந்திரன் அறையில் தூக்கில் பிணமாக தொங்கி இருக்கிறார், அவரது மகள் மூக்கில் நுரையுடன் இறந்து கிடந்தது இருக்கின்றனர்.

மாமல்லபுரம் போலீசார் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து கைப்பற்றிய கடிதத்தில் தங்களுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை என ரவிச்சந்தன் எழுதி இருக்கிறார். தன்னுடைய உறவினர் ஒருவருக்கும் வாட்சப்பில் இதே செய்தியை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில் மனைவி இறந்த விரக்தியில் ரவிச்சந்திரன் மகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்தது விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறுகின்றனர்.