கனவில் வந்த பாம்பு.. ஜோதிடரை நம்பி நாக்கை இழந்த நபர்..!

Photo of author

By Janani

பாம்பு கனவிற்கு முற்றுபுள்ளி வைக்க பரிகாரம் செய்ய சென்றவர் நாக்கை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

21ம் நூற்றாண்டிலும் ஜோசியம், ஜாதகத்தை நம்பி பல மூட நம்பிக்கை செயல்களில் ஈடுபடுவர்கள் அதிகம் உள்ளனர்.அவர்களின் மூட நம்பிக்கையால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களை கூட செய்வர். அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் அரங்கேறியுள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நபர் ஒருவருக்கு அடிக்கடி பாம்பு துரத்துவது போல கனவு வந்தது.இதனால், இரவுகளில் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். பாம்பு கனவுக்கு முற்றுபுள்ளி வைக்க நினைத்த அவர் அங்கிருந்த ஜோதிடர் ஒருவரை நாடியுள்ளார்.

அவர் பாம்புக்கு பூஜை செய்தால் கனவுகள் வராமல் தடுக்கலாம் என தெரிவித்தார். அதனை தொடர்ந்து பாம்பு புற்று உள்ள கோவிலுக்கு சென்று பூஜை செய்ய கூறியுள்ளார்.கோவிலுக்கு சென்ற அவருக்கு அந்த பூசாரி அவரிடம் சில பரிகாரங்களை சொல்லியதோடு பாம்பு புற்றில் நாக்கை விட கூறியுள்ளார். இதனை அடுத்து, அவர் அந்த பாம்பு புற்றில் நாக்கை வைத்துள்ளார்.

அப்போது புற்றில் இருந்த கட்டுவிரியன் பாம்பு அவரின் நாக்கை கொத்தியது. இதனால், மயங்கி விழுந்த அவரை உடன் வந்த உறவினர் மருத்துமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்து நாக்கை அகற்றினர். இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கும் போது கடந்த 18ம் தேதி வாயில் ரத்தம் கொட்டிய நிலையில் அவர் வந்தார். நாக்கின் திசுக்களில் கொடிய விஷம் ஏறியதால் அதனை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்படி இருந்தும் அவரின் உயிரை காப்பாற்ற போராட வேண்டி இருந்ததாக தெரிவித்தார். ஜோசியரின் பேச்சை கேட்டு கனவு தொல்லையில் இருந்து விடப்பட ஒருவர் நாக்கை இழந்து உயிருக்கு போராடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.