உலக நாயகன் மற்றும் தனுஷ் கூட வாங்கியாச்சு.. சூப்பர் ஸ்டாராக இருந்தும் இந்த விருது இல்லையா!!

0
235
Man of the World and Dhanush also got it.
Man of the World and Dhanush also got it.
இந்திய சினிமா வரலாற்றில் மிக முக்கியமான விருதாக தேசிய விருது கருதப்படுகிறது. இவ்விருது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தேசிய விருது வழங்கும் விழாவில் சிறந்த படத்திற்கான விருது, நடிகர் நடிகைகளுக்கான விருது, இசையமைப்பாளர், இயக்குனர் என தனித்தனி பிரிவில் வழங்கப்பட்டு வருகிறது.
இங்கு நாம் அதிக முறை தேசிய விருது பட்டத்தினை பெற்ற தலைசிறந்த நடிகர் ஆன கமலஹாசனை பற்றி பார்ப்போம் :-
தமிழ் சினிமா திரையுலகில் சிறு வயதில் இருந்தே நடித்து வரும் கமலஹாசன், தனது சிறந்த நடிப்பிற்காக இதுவரை மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
கமலஹாசன் முதன் முதலாக “மூன்றாம் பிறை” படத்திற்காக தான் தேசிய விருதினை வென்றார்.
இரண்டாவது தேசிய விருதினை இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய “நாயகன்” படத்திற்காக வென்றார்.
மூன்றாவது விருதினை இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த “இந்தியன்” படத்திற்காக வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமலஹாசனுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமா துறையில் சிறந்த நடிகருக்கான இரண்டு தேசிய விருதுகளை வென்றவர் நடிகர் தனுஷ் ஆவார். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் மற்றும் ஆடுகளம் படத்திற்காக இரண்டு விருதுகளை வென்றுள்ளார்.
Previous article“கோட் ” இந்த படத்தை பார்த்து எடுத்தது.. ஒப்புக்கொண்ட வெங்கட் பிரபு!!
Next articleநீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் சிம்புவின் புது பட அறிவிப்பு!! 90’ஸ் கிட்ஸ்  VS 2K கிட்ஸ்!!