காந்தியின் நினைவு நாள்:உருவாகிறாரா இன்னொரு கோட்ஸே!கைகட்டி வேடிக்கைப் பார்த்த போலிஸ்!
டெல்லியில் சி ஏ ஏவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபரால் மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக நேற்று டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் இருந்து ராஜ்காட் மாணவர் போராட்டம் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. அப்போது அங்கு வந்த ஒரு நபர் கையில் துப்பாக்கியோடு சத்தமிட்டுக் கொண்டே மாணவர்களைப் பார்த்து சுடுகிறார். அதில் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் உள்ளங்கையில் அடிபட்டது.
ஆனால் இவ்வளவு சம்பவங்களையும் அந்த பகுதியில் பாதுகாப்புக்காக வந்திருந்த போலிஸ்காரர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சம்பவம் பொதுமக்களின் கண்டனந்த்துக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து போலிஸார் தெரிவித்த தகவலிலோ நாங்கள் செல்வதற்குள் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது எனக் கூறியுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் விசாரணை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவர் ஷாதாப் பாரூக்கை மருத்துவமனையில் சந்தித்த பல்கலைக்கழக துணைவேந்தர் மாணவரின் மருத்துவ செலவை பல்கலைக்கழகம் ஏற்கும் என அறிவித்தார். நேற்று தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவுதாள் அனுசரிக்கப்பட்ட நிலையில் அவரைக் கொலை செய்த கோட்சேவைப் போல மற்றொரு நபர் துப்பாக்கியோடு இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டது இன்னும் கோட்ஸேக்கள் சாகவில்லை, அவர்கள் காந்திகள் உருவாகும் போது கொலை செய்யக் காத்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.