திருமணமான பெண்கள் வேறொருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு அது கணவருக்கு தெரியவர மனைவியை போட்டு அடிப்பதும், துன்புறுத்துவதும் பல இடங்களில் நடக்கும். ஒருபக்கம், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை கள்ளக்காதலனின் துணையுடன் மனைவியே கொலை செய்யும் சம்பவமும் அடிக்கடி செய்திகளில் பார்க்க முடியும். அதுவும் கணவனை துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் வீசிய சம்பவங்களும் கூட நாட்டில் நடந்து வருகிறது.
ஆனால், உத்தரபிரதேசத்தில் தன் மனைவி இன்னொருவரை காதலிப்பது தெரிந்து அந்த ஆணுக்கே மனைவியை திருமணம் செய்து வைத்த கணவன் பற்றிய செய்தி சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் பலராலும் இணையத்தில் பகிரப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ல கபிர் நகர் கடார் ஜாட் கிராமத்தில் வசிப்பவர் பப்லு. இவர் ராதிகா என்கிற பெண்ணை 2017ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 குழந்தைகள் உண்டு. பப்லு வெளியூரில் வேலை பார்த்து வந்ததால் ராதிகாவும் அதே ஊரில் வசித்து வந்த வேறொரு இளைஞருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. சொந்த ஊருக்கு திரும்பி பப்லுவுக்கு தனது மனைவி கடந்த ஒன்றரை வருடங்களாக வேறொருவருடன் தொடர்பில் இருப்பதை தெரிந்துகொண்டார்.
கோபப்படாத பப்லி அந்த வாலிபரை அழைத்து பேசி தனது மனைவியை அவருக்கே திருமணம் செய்து வைத்தார். அதோடு, 2 குழந்தைகளை தானே பார்த்துக்கொள்கிறேன் எனவும் கூறிவிட்டார். ராதிகாவின் திருமண வீடியோவும், புகைப்படமும் இணையத்தில் வைரலாக பப்லுவை பலரும் பாராட்டினார்கள். கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவிகளே கணவன்களை கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து வருவதால் தான் இந்த முடிவை எடுத்ததாக சொன்னார் பப்லு.
இந்நிலையில், திடீர் திருப்பமாக திருமணமாகி 3 நாட்கள் ஆன நிலையில் ராதிகாவை மீண்டும் தனது வீட்டுக்கே கூட்டி வந்துவிட்டாராம் பப்லு. குழந்தைகளை தன்னால் பார்த்துக்கொள்ள முடியவில்லை என்பதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது.