சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல  பூஜைகள்! அடுத்த மாதம் முதல் தொடங்கும் ஆன்லைன்  முன் பதிவு!

0
292
Mandala Pujas at Sabarimala Ayyappan Temple! Online pre-registration starting from next month!
Mandala Pujas at Sabarimala Ayyappan Temple! Online pre-registration starting from next month!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல  பூஜைகள்! அடுத்த மாதம் முதல் தொடங்கும் ஆன்லைன்  முன் பதிவு!

கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்கதர்கள் மாலை அணிந்து செல்வது வழக்கம்.மேலும் ஆண்டு தோறும் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும்.அந்த வகையில் நடப்பாண்டில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் மாதம் 15ஆம் தேதியன்று மாலை நடைதிறக்கப்படவுள்ளது.

இதனைதொடர்ந்து நவம்பர் 16ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகின்றது.அதன் பிறகு இந்த மண்டல பூஜையானது டிசம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று நிறைவடைந்து நடை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனைத்தொடர்ந்து மீண்டும் வரும் டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும்.

மேலும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி மகர விளக்கு பூஜை முடிவடைந்து நடை அடைக்கப்படும்.அதனையடுத்து 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது அதனால் ஐயப்பன் கோவிலில் சாமி தரிசம் கான விரும்பும் பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது.

மேலும் நாளொன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்கதர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர்  தேவஸம்போர்டு அறிவித்துள்ளது.மேலும் வரும் வாகனங்கள் நிலக்கல் வரையே அனுமதிக்கப்படும்.அங்கிருந்து பம்பைக்கு செல்ல கேரள அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.மேலும் முன்பதிவு செய்ய விரும்பும் பக்கதர்கள் http://WWW.sabarimalaonline.org என்ற அதிகாரபூர்வமான தளத்தில் முன்பதிவு செய்யல்லாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Previous articleபாஜக நிர்வாகிகளின் கால்களை கழுவிய முதல்வர்! வெளிவந்த வீடியோ பதிவு!!
Next articleஏரி உடைஞ்சா மீன் ஏரியாவுக்கு வந்துதானே ஆகணும்… வில்லன் வேடத்தில் நடிக்க ஒத்துக்கொண்ட ஜீவா!