இந்த மாநிலங்களில் கட்டாயம் ஊரடங்கு! அதிகரிக்கும் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை!!

0
170
What are the curfew restrictions? Here is the important information of the Minister!
What are the curfew restrictions? Here is the important information of the Minister!

இந்த மாநிலங்களில் கட்டாயம் ஊரடங்கு! அதிகரிக்கும் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை!!

கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இன்றுவரை அதிலிருந்து முழுமையாக மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி ஒவ்வொரு காலகட்டத்திலும் இத் தொற்று பாதிப்பு உருமாறிக் கொண்டே உள்ளது.கொரோனா வைரஸாக இருந்த தொற்று முதலில் டெல்டா வைரஸாக மாறியது.அதனையடுத்து கொரோனா ,தற்பொழுது ஒமைக்ரான் வைரசாக மாறியுள்ளது.இந்த ஒமைகரான் வைரஸ் தென் ஆப்பிரிக்கா நாட்டில் தற்பொழுது அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசானது கொரோனா முதலில் ஆரம்பித்த கொரோனா தொற்றை விட பல மடங்கு வீரியமுடையது என கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி இத்தொற்று அதி வேகத்தில் பரவக் கூடியது.தென்னாபிரிக்காவில் இதுவரை பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அந்நாட்டில் மட்டுமல்ல சிங்கப்பூர் என 12 நாடுகளில் இத்தொற்று தீவிரம் காட்டி வருகிறது.இந்தியாவில் தற்பொழுது அதன் ஆதிக்கம் சற்று ஆரம்பித்துள்ளது.முதலில் வெளிநாடு சென்று வந்த கர்நாடகாவை சேர்ந்த நான்கு பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதியானது.தற்பொழுது ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.குஜராதில் 2 பேருக்கும் உறுதியாகியுள்ளது.அதுமட்டுமின்றி கர்நாடகாவில் 4 ஆக இருந்த தொற்று பாதிப்பு தற்பொழுது 8 ஆக மாறியுள்ளது.

இந்த தொற்று பாதிப்பு உறுதியானவர்கள் அனைவரும் வெளிநாடு சென்று வந்தவர்களே என்று கூறியுள்ளனர்.தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.இந்த மாநிலங்களில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் கூடிய விரைவில் ஊரடங்கு போடப்படும் என கூறுகின்றனர்.இதுவரை ஒமைக்ரான் தொற்றால் இந்தியாவில் எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.இருப்பினும் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் அது தீவீரமடைவதற்கு முன்பு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என கூறுகின்றனர்.அந்தவகையில் பார்க்கும் பொழுது இம்மாநிலத்தில் கூடிய விரைவில் ஊரடங்கு போடப்படும்.

Previous articleதிண்டாடும் நியூசிலாந்து அணி! வெற்றிக்களிப்பில் இந்தியா!
Next article8 வது 9 வது படிக்கும் மாணவர்களின் மது மோகம்! அதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம்!