இந்த 6 மாவட்டங்களில் கட்டாயம் லாக் டௌன்! வெளிவரும் திடீர் முடிவுகள்!
கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட,இந்த ஆண்டு 2-ம் அலையாக உருமாறி அதி வேகமாக பரவி வருகிறது.அதுமட்டுமின்றி தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தால் அதிக அளவு கொரோனா தொற்றானது பரவியுள்ளது என உயர்நீதி மன்றமே தெரிவித்தது.அதற்கடுத்து வரும் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வரும் நிலையில்,வாக்கு எண்ணிக்கை மிகுந்த பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடன் நடக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
ஆனால் அதற்கு முன்னதாகவே அதிக அளவு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் இல்லா பற்றாக்குறையால் மகராஷ்டிரம்,பீகார் போன்ற மாநிலங்களில் மக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்து வருகின்றனர்.அதனால் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு அல்லது அதிக கட்டுப்பாடுகள் கூடிய ஊரடங்கை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும் என தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கூறியுள்ளார்.
அதனால் 6 மாவட்டங்களான காஞ்சிபுரம்,திருவள்ளூர்,செங்கல்பட்டு,தேனி,ராணிப்பேட்டை,திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.இந்த ஆலோசானையின் முடிவில் இந்த 6 மாவட்டங்களுக்கு முதலில் முழு ஊரடங்கு அல்லது மிகுந்த கட்டுப்பாடுகள் போடப்படும் என சுற்று வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.கொரோனா தொற்று தற்சமயம் அதிக அளவு பரவி வருவதை அறிந்து சிலர் விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருக்கின்றனர்.இறுதி சடங்கில் மற்றும் கல்யாண நிகழ்வுகளில் கலந்துக் கொள்பவர்கள் முகக்கவசம் அணியாமலும்,சமூக இடைவெளி கடை பிடிக்காமலும் இருப்பதால் அதிக அளவு கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.