இவர்களுக்கு கட்டாயம் நிரந்தர பணி நீக்கம்! பணியாளர்களுக்கு போக்குவரத்து துறையின் அதிரடி எச்சரிக்கை!
தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து வன்கொடுமைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகள் முதல் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் வரை அனைவருக்கும் பாலியல் தொல்லை அளித்து வருகின்றனர். நமது வீடுகளில் உற்றார் உறவினர்களை நம்பியும் பெண்பிள்ளைகளை விட்டு செல்வது தற்போதைய சூழலில் கடினமாகவே உள்ளது. அந்தவகையில் விழுப்புரத்தில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
விழுப்புரம் ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யும் நோக்கத்திற்காக கடத்திச் செல்லுதல், தப்பிக்க விடாமல் தடுத்தல் மேலும் பாலியல் தொந்தரவு கொடுத்தல் என பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடத்துனர் சிலம்பரசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழும் மேலும் குற்றம் நடந்த இதற்கு உடந்தையாக இருந்த சட்டப் பிரிவின் கீழும் ஓட்டுனர் அன்புச்செல்வன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்பொழுது இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததன் காரணமாக ஓட்டுனர் மற்றும் நடத்துனர் சிலம்பரசன் ஆகிய இருவரையும் தற்பொழுது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல இந்த சம்பவத்தால் போக்குவரத்து கழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் மேலும் நடக்காமலிருக்க போக்குவரத்து துறை நடத்தினார் மட்டும் ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழ்ந்தால் அந்தப் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல அந்த பணியாளர்கள் நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்படுவர் என இவ்வாறு போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.