கரையை கடக்கிறது மாண்டஸ்.. இதையெல்லாம் கட்டாயம் செய்யுங்கள்..!

மழைக்காலத்தில் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகிறது. குறிப்பாக புயல் போன்ற பேரிடர் சமயங்களில் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது அவசியமாகிறது. மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இன்று புயல் கரையை கடக்க உள்ள நிலையில் தேவையற்ற பயணங்களில் ஈடுபட வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது.

அதே போல பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

காற்று பலமாக வீசக்கூடும் என்பதால் மரங்களின் கீழ் நிற்பதை தவிர்க்க வேண்டும். அபத்தான இடங்களில் Selfie எடுப்பதி தவிர்க்க வேண்டும். மெழுகுவர்த்தி, கைமின் விளக்க, தீப்பெட்டி மின்கலன்கள், மருத்துவ கட்டு, உலர்ந்த உணவு வகைகள், குடிநீர் மருந்துகள் உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

கால்நடை, செல்லபிராணி வளர்ப்பு பிராணிகளையும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். மின் கம்பங்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். மின்கம்பங்கள், மின் வயர்கள் கீழே விழுந்து கிடந்தால் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும்.

வெள்ள நீரில் தேவையற்று இறங்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில்லாதவர்களுக்கும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து மாண்டஸ் புயலை பாதுகாப்பாக கடக்க முன்னெச்சரிக்கையோடு இருப்பதும் அவசியமாகிறது.

Leave a Comment