தண்ணீரைக் கண்டதும் குழந்தையாக மாறிய யானை மங்களம்!! வியந்தபடி நின்று ரசித்த அமைச்சர் சேகர்பாபு!
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசியலை பலரும் பல விதமாக குறை சொல்லி வருகிறார்கள். ஆனால் கடந்த சிறிது காலமாக அமைச்சர் சேகர்பாபுவிற்கு அழைக்கப்பட்ட அறநிலையத்துறையில் பதவிக்கு உகந்தார் போல் பல நல்ல விஷயங்களை செய்து கொண்டு வருகிறார்.
அமைச்சர் சேகர்பாபுவிற்கு அறநிலை துறையை ஒதுக்கிய பிறகு பல கோவில்களில் அன்னதான திட்டங்களை துவங்கி வைத்தும், கோவில்களில் டிக்கெட் வழங்குவதில் மூலம் நடந்த மோசடிகளை கண்டறிந்து பணி நீக்கம் செய்தது போன்ற நற்செயல்களை செய்து கொண்டிருக்கிறார்.
அதேபோல் சிறப்பு வாய்ந்த கோவில்களில் உள்ள யானைகளுக்கு உல்லாச குளியல் போட நீச்சல் குளம் அமைத்து தரும் பணி பல கோயில்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த 1982 ஆம் ஆண்டு காஞ்சி மகா பெரியவரால் வழங்கப்பட்ட யானை ஒன்றும் உள்ளது. அந்த யானைக்கு மங்களம் என்ற பெயர் சூட்டி கடந்த 41 வருடங்களாக பராமரித்து வருகிறது கோயில் நிர்வாகம்.
தற்போது மங்களம் யானையின் வயது 55 எனக் கூறப்படுகிறது. மங்களம் குளிப்பதற்கு ஏற்றவாறு கோவில் வளாகத்தில் நீச்சல் குளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை மற்றும் உபயதாரர்கள் பங்களிப்பில் ரூ 8.40 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சுவர்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது இந்த நீச்சல் குளம்.
இந்த நீச்சல் குளம் எட்டடி உயரமும் 29 அடி நீளம் மற்றும் அகலமும் கொண்டுள்ளது. புதிதாக கட்டப்பட்ட நீச்சல் குளத்தை அமைச்சர் சேகர்பாபு நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
இதன் பின்பு நீச்சல் குளத்தில் நீரால் நிரப்பப்பட்டு அதில் உற்சாகத்தோடு குளியலிட்டால் மங்களம். தண்ணீரில் இறங்கியதும் சிறுபிள்ளை போல் நீரை பீற்றியடைத்து விளையாடத் தொடங்கினால் மங்களம். இந்த மங்களத்தின் மகிழ்ச்சியை கண்டு அமைச்சர் சேகர்பாபு திகைத்து நின்றபடி ரசித்து கொண்டிருந்தார்.