மாங்கல்ய தோஷமும்! அதன் பரிகாரமும்!

Photo of author

By Sakthi

திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே பிள்ளையார் சுழி போடுவது ஒருவரின் பிறப்பு ஜாதகம் தான். திருமண பேச்சை எடுத்த உடனேயே ஜாதகம் பார்த்தாச்சா? ஜாதகம் எப்படி இருக்கிறது? தோஷம் இருக்கிறதா? பரிகாரம் செஞ்சீங்களா? என உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அக்கம்பக்கத்தினர் என்று மாறி, மாறி கேட்பார்கள். திருமணம் தொடர்பான விவகாரத்தில் ஒருவரின் சுய ஜாதக கிரக அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

சில வகையான தோஷங்கள் சில கிரக சேர்க்கைகள் சில தசா புத்திகள் கோச்சார நிலை போன்ற வெவ்வேறு காரணங்களால் திருமணம் தாமதமாகிறது. இது போன்ற காரணங்களால் திருமணம் தாமதமானால் என்ன செய்வது? அதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா? என்பது பலருக்கும் வரும் சந்தேகம் தோஷங்கள் பற்றி சொல்லும் ஜோதிட சாஸ்திரம் அவற்றுக்கான பரிகாரங்களையும் சொல்லி இருக்கிறது.

இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும் எட்டாம் பாவகம் மாங்கல்ய ஸ்தானமாகும் அதுவே ஆயுள்தானம் அதாவது லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷம் ஆகும். இது திருமண தடையை அதிகரிக்கும் தோஷ அமைப்பாகும்.

எட்டாம் இடத்தில் நீச அஸ்தங்கம் பெற்ற கிரகம் அமர்வது மாங்கல்ய தோஷத்தை கொடுக்கும் இதில் எட்டாம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தாலும், எட்டாம் அதிபதி பலம் பெற்று இருந்தாலும் தோஷ நிவர்த்தி என்று சொல்லப்படுகிறது.

வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் வயதான சுமங்கலி பெண்களிடம் மங்களப் பொருட்கள் தந்து ஆசி பெற வேண்டும்.