‘பொன்னியின் செல்வன் நாவலை எம் ஜி ஆர் எங்களுக்காக விட்டுவெச்சிட்டு போயிருக்கார்’… மணிரத்னம் நெகிழ்ச்சி

0
220

‘பொன்னியின் செல்வன் நாவலை எம் ஜி ஆர் எங்களுக்காக விட்டுவெச்சிட்டு போயிருக்கார்’… மணிரத்னம் நெகிழ்ச்சி

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய கனவுப் படைப்பாக உருவாக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.மேலும் இந்த படத்திற்காக இவர்கள் பல்வேறு விதமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர் . ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே முழுவதுமாக நிறைவடைந்து விட்டது .

இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆடியோ உரிமையை அனைத்து மொழிகளுக்கும் சேர்த்து TIPS பிலிம்ஸ் & மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. அதையடுத்து கதையின் முக்கியக் கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன. நேற்று மாலை படத்தின் டீசர் வெளியானது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் மணிரத்னம் “இந்த படம் மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் நடிக்க வேண்டியது. நாடோடி மன்னன் படத்துக்குப் பிறகு அவர் இந்த படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் ஏனோ முடியாமல் போய்விட்டது. இப்போது நான் நினைக்கிறேன். அவர் எங்களுக்காக விட்டு வைத்துவிட்டு போயிருக்கிறார் என்று. நானே மூன்று முறை படத்தை தொடங்கி ஆரம்பிக்க முடியாமல் கைவிட்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

Previous articleபிரம்மதேவன் வழிபட்ட விருத்தகிரீஸ்வரர்!
Next articleவிக்ரம் பட வசனகர்த்தா இயக்கத்தில் சந்தானம் நடித்த ‘குலு குலு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here