திமுக வுடன் மநீம கூட்டணியை உறுதிப்படுத்திய நடைப்பயணம்!! ராகுல் காந்தியுடன் களத்தில் இறங்கிய கமல்!!

0
284

திமுக வுடன் மநீம கூட்டணியை உறுதிப்படுத்திய நடைப்பயணம்!! ராகுல் காந்தியுடன் களத்தில் இறங்கிய கமல்!!

2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் இருக்கும் பட்சத்தில் அனைத்து கட்சிகளும் தற்போது இருந்தே அதற்கான ஆலோசனை தொடங்கி விட்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சில தினங்களுக்கு முன்பு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

அவ்வாறு நடத்தியதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அதற்குரிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டது.

அந்த வகையில் கமல்ஹாசன் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைப்பாரா அல்ல வேறு ஓர் கட்சியில் கூட்டணி வைத்து பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வாரா என பல கேள்விகள் எழுந்தது.

அந்த வகையில் காங்கிரஸ் எம்பி தற்பொழுது இந்திய ஒற்றுமைக்காக காஷ்மீர் நோக்கி நடை பயணம் மேற்கொள்ளும் இவருடன் நூற்றுக்கணக்கானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இவ்வாறு இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியுடன் இன்று கமல்ஹாசன் நடைப்பயணம் மேற்கொள்ளப் போவதாக மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இவ்வாறு இவர் அறிவிப்பை வெளியிட்டதும் பலரும் திமுகவுடன் இவர் இணைய போகிறாரா என்று கேள்வி எழுப்பினர்.

திமுகவைச் சார்ந்து காங்கிரஸ் இருக்கும் பட்சத்தில், தற்பொழுது கமல்ஹாசன் ராகுல் காந்தியுடன் நடைபயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து இவர்களின் கூட்டணி உறுதி என பல அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர்.

அந்த வகையில் இன்று டெல்லியில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனும் கலந்துகொண்டு இருவரும் ஒன்று சேர்ந்து பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு இவர்கள் ஒன்று சேர்ந்து நடை பயணம் மேற்கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதுடன் இவர்களுக்குள் கூட்டணி உறுதி என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Previous articleமின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
Next articleஉட்கட்சி நிர்வாகிகள் போட்ட பிரஷர்.. “இதற்கு மேல் என்னிடம் சக்தி இல்லை”- பதவியை திடீர் ராஜினாமா செய்த இளம் பெண் கவுன்சிலர்!!