மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம்!! நாட்டில் என்னதான் நடக்கிறது என்று கேள்வி எழுப்பிய நடிகை!!
மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அங்கு இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.
இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டதாக செய்திகள் வந்தது. இந்த சம்பத்திற்கு பெண்களும், கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ரஷ்மிகா மந்தனா, இந்தியத் திரைப்பட பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது நாட்டை அவமான படுத்திய மணிப்பூர் சம்பவம் குறித்து கண்டம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் நான் படித்ததை என்னால் நம்பவே முடியவில்லை என்றும் இந்த கொடூர சம்பவம் மனதை குலைக்கிறது என்றும் கண்டனம் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து சொல்வதற்கு மிகுந்த வருத்தமாக இருந்தாலும், இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது என்று கேள்வி எழுப்பினார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதயபூர்வமாக நான் நிற்கிறேன் என்று குறிப்பிட்டார். அதனை தொடர்ந்து முக்கிய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கண்டனம் தெரிவித்தார்.